சென்னை:

பெரியகுளம் (தனி) சட்டமன்ற தொகுதிக்கு அதிமுக வேட்பாளர் எம்.முருகன் பெயரி அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது வேட்பாளரை மாற்றி அதிமுக தலைமை அறிவித்து உள்ளது.

அவருக்கு பதிலாக மயில்வேல் நிறுத்தப்படுவதாக ஈபிஎஸ், ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்திந்திய ஆட்சி மன்றக்குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி 18-4-2019 அன்று  நடைபெறவுள்ள சட்டமன்ற இடைத்தேர்தலில் தேனி மாவட்டம், பெரியகுளம் (தனி) சட்டப்பேரவை தொகுதிக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வேட்பாளருக்கு பதிலாக தேனி-அல்லி நகர புரட்சி தலைவி அம்மா பேரவை துணைச் செயலாளர் மயில்வேல் நிறுத்தப்படுகிறார் என கூறப்பட்டுள்ளது.