சி.வி.குமார் இயக்கியுள்ள ‘கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்’ படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
இதன் ஃபர்ஸ்ட் லுக் கடந்த ஜனவரியிலும், டீஸர் பிப்ரவரியிலும் ரிலீஸானது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
நாயகியை முன்னிலைப்படுத்திய இந்தப் படத்தில், பிரதான வேடத்தில் பிரயங்கா ருத் நடித்துள்ளார்.
இந்தப் படத்தை வருகிற ஏப்ரல் 12-ம் தேதி வெளியிட படக்குழு முயற்சி மேற்கொண்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.