எரிக்சன் தொடர்பான வழக்கில், கைது நடவடிக்கையில் இருந்து தனது தம்பி அனில் அம்பானியை காப்பாற்றிய முகேஷ் அம்பானிக்கு பின்புலமாக இருந்து செயல்பட்டது அவர்களின் அம்மா கோகிலாபென் என்பது தெரிய வந்துள்ளது.
தனது தம்பி அனில் அம்பானியின் கடன் தொகையை செலுத்தி, அவர் சிறை தண்டனையை தவிர்க்க உதவிய முகேஷ் அம்பானியின் செயல் மற்றும் அதற்கு நன்றி தெரிவித்த அனில் அம்பானி குறித்தும் பரபரப்பு தகவல்கள் வெளியாகி வந்தன.
இந்த நிலையில், தனது இரு மகன்களையும் இரு கண்களாக நினைத்து பாதுகாத்து வரும் அவர்களது தாயார் கோகிலா பென்னின் தீவிர நடவடிக்கை காரணமாகவே அனில் அம்பானி சிறைக்கு செல்வதில் இருந்து தப்பித்தார் என்று கூறப்படுகிறது.
தொலைத் தொடர்பு பெரு நிறுவனமான எரிக்சனோடு, ரிலையன்ஸ் தொலைத்தொடர்பு நிறுவனம் உருவாக்கிய ஒப்பந்தம் ஒன்று முறிந்த பின்னர், எரிக்சன் நிறுவனத்திற்கு 5.5 பில்லியன் ரூபாய் வழங்க உச்சநீதி மன்றம் உத்தரவிட்டது. ஆனால், அந்த பணத்தை செலுத்த முடியாத அனில் அம்பானி, காலக்கெடு முடிந்தால், சிறைக்கு செல்ல நேரிடும் என்பதை அறிந்தார்.
இந்த தகவல்கள் ஊடகங்களிலும் பரவி பரபரப்பை ஏற்படுத்தின. அதே வேளையில் முகேஷ் அம்பானி மகனின் திருமண வேலைகளும் நடைபெற்று வந்து.
இதற்கிடையில், அவர்களது அம்மா கோகிலா பென், முகேஷ் அம்பானி மூலம் பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தினார். அதன்பின்பே, தனது சகோதரர் அனில் அம்பானிக்கு முகேஷ் அம்பானி உதவி அவரை காப்பாற்றினார்.
கடந்ந்த பல ஆண்டுகளாக உடன்பிறப்புகள் இடையே நிலவி வந்த மோதல் போக்கு, முகேஷ் அம்பானியின் தற்போதைய உதவியால் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து,, என்னுடைய மரியாதைக்குரிய அண்ணன் முகேஷுக்கும், அண்ணி நிட்டாவுக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றிகள். என்னுடைய இந்த இக்கட்டான நிலையில், சரியான நேரத்தில் உதவியிருப்பதன் மூலம் எமது குடும்ப மதிப்பீடுகளுக்கு உண்மையாக இருப்பதன் முக்கியத்துவத்தை அவர்கள் காட்டியுள்ளனர்” என்று அனில் அம்பானி உருக்கமாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.