லக்னோ:
யோகி ஆதித்யநாத்தின் 2 ஆண்டு ஆட்சியை வன்முறை இல்லாத ஆட்சி என்று கூறுவது கேலிக்கூத்து என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி விமர்சித்துள்ளார்.
மக்களவை தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 2 ஆண்டு யோகி ஆதித்யநாத் ஆட்சி, வன்முறை இல்லாத ஆட்சி என்று கூறுவது கேலிக்கூத்து என்று விமர்சித்தார்.
தங்கள் மீதுள்ள குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவித்துக்கொள்ள உத்திரப்பிரதேச மாநில அமைச்சர்கள் தீவிரம் காட்டுவதாக குறிப்பிட்ட மாயாவதி, பாஜக ஆட்சியில் கும்பலாக வந்து தாக்குதல் நடத்திய சம்பவத்தைப் பார்த்து உலகமே சிரிக்கிறது என்றார்.