சென்னை:
அதிமுகவுக்கு வாக்களித்தால் தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளபடி மாதம் ரூ.1500 கிடைக்கும் என்று அமைச்சசர் ஜெயக்குமார் கூறினார்.
இது தேர்தல் விதிகளை மீறிய செயல் என்று திமுக வழக்கறிஞர்கள் பிரிவு தமிழக தலைமை தேர்தல் ஆணையரிடம் புகார் மனு கொடுத்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த மாதம் 18ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இது தொடர்பாக அதிமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், பொதுமக்களின் வாக்குகளை கவரும் வகையில், ஏழை மக்களுக்கு மாதம் ரூ.1500 நிதி உதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதுகுறித்து விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இந்த நிலையில், அமைச்சர் ஜெயக்குமார் கூறும்போது, திமுக.விற்கு வாக்களித்தால் ரூ.1500 கிடைக்கும் என கூறினார்.
இது தேர்தல் விதிகளை மீறி செயல் என்று கூறி அமைச்சர் ஜெயக்குமார் மீது தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் திமுக வழக்கறிஞர்கள் பிரிவு சார்பில் புகார் அளித்துள்ளது.