சென்னை:

நாடாளுமன்ற தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், தென்சென்னையில் திமுக வேட்பாள ராக அறிவிக்கப்பட்டுள்ளார் தமிழச்சி தங்கப்பாண்டியன்.

இன்று சைதாப்பேட்டையில் நடைபெற்ற தேர்தல் பணிமனை திறப்பு விழாவில் கலந்துகொண்டு பேசிய மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின், தமிழச்சி தங்கபாண்டியனை, அழகான வேட்பாளர் என்றும், அவரது பணியும் அழகானது என்று கூறினார்.

தென் சென்னை பகுதியான  சைதாப்பேட்டையில் தென்சென்னை  நாடாளுமன்றத் தொகுதியின் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தேர்தல் பணிமனையை திறந்து வைத்த  உதயநிதி ஸ்டாலின்  மக்களவை தேர்தலில் திமுகவின் தேர்தல் அறிக்கை கதாநாயகனாக இருக்கும் எனத் தெரிவித்தார்.

இநத் நிகழ்ச்சியில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி திமுக தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன், திமுக தெற்கு மாவட்டச் செயலாளரும் சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான மா.சுப்ரமணியன் உள்பட திமுக நிர்வாகிகள் கூட்டணி கட்சியினர் உள்பட  ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் பேசிய  தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்க பாண்டியன், ‘‘அடுத்த பிரதமரை தீர்மானிக்கப்போவது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் என்றும், தமிழகத்தின் அடுத்த முதல்வராக மு.க.ஸ்டாலின் என்றும் கூறினார்.

அதையடுத்து பேசிய  உதயநிதி ஸ்டாலின், “கேடுகெட்ட மோடி ஆட்சியையும், மானங்கெட்ட எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியையும் வீட்டுக்கு அனுப்பும் வகையில் வாக்காளர்கள் திமுக வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும்“ என கேட்டுக்கொண்டார்.

மேலும், தென்சென்னை தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் தமிழச்சி தங்க பாண்டி யன் ஓர் அழகான வேட்பாளர். அவரை உங்கள் தொகுதி உறுப்பினராக நாடாளு மன்றத்திற்கு அனுப்ப உங்களது ஆதரவு தேவை என்றவர்,  தான் அழகு என்று குறிப்பிட்டது அவர் தமிழின் மீது கொண்ட பற்றையும், கழகத்தின் மீது கொண்ட அன்பையும் தான் என  விளக்கமளித்தார்.

உதயநிதி ஸ்டாலினின் பேச்சு கட்சி நிர்வாகிகளிடையே நகைப்பை ஏற்படுத்தியது.