சிவகங்கை:
நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன.
இந்த நிலையில் சிவகங்கை தொகுதியில், தேர்தல் விதியை மீறி திறக்கப்படாமல் மூடி வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர் சிலையை அதிமுகவினர் திறந்தனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுக நிர்வாகி செந்தில்நாதன் தனது ஆதரவாளர்களுடன் வந்து, சிவகங்கையில் இதுவரை திறக்கப்படாமல் மூடி வைக்கப்பட்டு இருந்த எம்ஜிஆர் சிலையை திறந்து வைத்தார். இதற்கு அந்த பகுதியை சேர்ந்த அரசு ஊழியரான விஏஓவும் உடந்தையாக இருந்தாக கூறப்படுகிறது.
தேர்தல் விதியை மீறி சிலை திறக்கப்பட்டுள்ளது குறித்து புகார் தெரிவிக்க வேண்டிய, விஏஓ அதை கண்டுகொள்ளாமல் இருந்தை காங்கிரஸ் கட்சியினர் கண்டித்து உள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு புகார் அனுப்பி உள்ளனர்.
இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.