சென்னை:
பாராளுமன்ற தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. சென்னை ராயபேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட அதிமுக மூத்த தலைவர்கள் முன்னிலையில், மக்களவை தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.
தேர்தல் அறிக்கையை வெளியிட்டு, துணைமுதல்வர் ஓபிஎஸ் அதிலுள்ள முக்கிய தகவல்களை செய்தியாளர்களிடம் வாசித்து காண்பித்தார்.
அதிமுக தேர்தல் அறிக்கையின் சிறப்பு அம்சங்கள்
சமூகநீதிக் கொள்கையில், மதச்சார்பின்மையில் அதிமுக அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டுள்ளது
மாதாந்திர நேரடி உதவித்தொகை ரூ.1500 வழங்கும் திட்டம் நாடு முழுவதும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு செயல்படுத்தப்படும்
அம்மா தேசிய வறுமை ஒழிப்புத் திட்டத்தை நாடுமுழுவதும் செயல்படுத்த மத்திய அரசை வலியுறுத்தப்படும்
இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க புதிய அமைப்பு ஒன்று தேசிய அளவில் உருவாக்கிட வலியுறுத்தப்படும்
காவிரி-கோதாவரி இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசை வலியுறுத்துவோம்
மேற்குதொடர்ச்சி மலையில், பருவமழைக் காலங்களில் பெறும் நீரை பயன்படுத்த தடுப்பணை, நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டம்
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்றுள்ள கல்விக் கடன்களை ரத்து செய்ய வலியுறுத்துவோம்
கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வலியுறுத்தப்படும்
நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க தொடர்ந்து வலியுறுத்தப்படும்