விக்டோரியா
நியுஜிலாந்து மசூதி தாக்குதலில் இறந்தவர்களின் ஈமச்சடங்குக்கு அரசு பணம் அளிக்க உள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று நியுஜிலாந்து நகரில் இரு மசூதிகளில் திடீரென துப்பாக்கி சூடு நடந்தது. இதில் 50 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளை சேர்ந்தவர்களும் உள்ளனர். இந்த சம்பவம் உலகையே சோகத்தில் ஆழ்த்தியது.
இந்த தாக்குதலில் சம்பந்தப்பட்ட ஆஸ்திரேலியரும் அவருடைய கூட்டாளிகளும் கைது செய்யப்பட்ட்டு விசாரனை நடந்து வருகிறது. இந்த துப்பாக்கி தாக்குதலுக்கு பல உலக தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். நியுஜிலாந்து பிரதமர் ஜெசிந்தா அந்நாட்டில் இனி துப்பாக்கி உரிம சட்டம் கடுமையாக்கபடும் என அறிவித்துள்ளார்.
அத்துடன் பிரதமர் ஜெசிந்தா, “இந்த தாக்குதல் மிகவும் கண்டனத்துக்குரியது. இந்த தாக்குதலில் மரணம் அடைந்தோர் இறுதிச் சடங்குக்காக விபத்து இழப்பீடு ஆணையத்தின் மூலம் அரசு $10,000 டாலர்கள் வழங்குகிறது. இது அனைத்து நாட்டினருக்கும் அளிக்கப்படும்” என அறிவித்துள்ளார்.