சென்னை:

மிழகத்தில் 21 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், 18 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், இன்று டில்லியில்  தேர்தல் அதிகாரிகளுடன் திமுக எம்.பி.க்கள் சந்தித்து பேசினர்.

நாடு முழுவதும், நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ள நிலையில், தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன்,  18சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

தமிழகத்தில் 21 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், 18 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் ஆணையம், தேர்தல் அறிவிப்பை வெளியிட்டது. வழக்குகள் காரணமாக தேர்தல் நடத்தப்படவில்லை என்று காரணம் கூறப்பட்டது. இது பரபரப்பை ஏற்படுத்தியது.

திமுக இது தொடர்பாக திமுக உச்சநீதி மன்றத்தை நாடியது. வழக்கை நீதிபதி பாப்டே தலைமை யிலான அமர்வு விசாரித்து, தேர்தல் ஆணையம் ஏப்ரல் 8-ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

இந்த நிலையில், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள திருப்பரங்குன்றம் , ஓட்டப்பிடாரம்  அரவக்குறிச்சி , இடைத் தேர்தலை நடத்த வலியுறுத்தி,  டெல்லி தேர்தல் ஆணையர்களுடன் திமுக எம்பி திருச்சி சிவா , டிகேஎஸ் இளங்கோவன் , ஆலந்தூர் பாரதி ஆகியோர் மீண்டும் சந்திப்பு பேசினர்.

அப்போது,  இடைத்தேர்தலை நடத்த நீதிமன்றம் தடை விதிக்கவில்லை என கூறினர்.

இதற்கிடையில்,  3 தொகுதி இடைத்தேர்தலை நடத்துவது குறித்து சட்ட நிபுணர்களுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி வருகிறது.