சென்னை:

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பான செய்திகளை வெளியிட்டு,  பெண்களுக்கு உதவி செய்யுங்கள் என்று பிரபல பாடகியான மீடூ புகழ் சின்மமி  டில்லி செய்தியாளர்களுக்கு அழைப்பு விடுத்து உள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக பொள்ளாச்சியில் நடைபெற்று வந்துள்ள சமூக வலைதளம் மூலம் இளம்பெண்களை வசிப்படுத்தி, அவர்களை பாலியல் வன்புணர்வு செய்து வீடியோ எடுத்து, அதைக்காட்டி மிரட்டி பணம் பறிந்து வந்த படுபாதக செயல் சமீபத்தில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. குலைநடுங்க வைக்கும் இந்த விவகாரத்தில் அரசியல் புள்ளிகள் பலர் சம்பந்தப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக, இதுகுறித்து மேலும் தகவல்கள் வெளிவராமல் தடுக்கும் வகையில், பாதிக் கப்பட்ட பெண்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை ஒரு கும்பல் மிரட்டி வருவதாக கூறப்படுகிறது.

தமிழகம் முழுவதும்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும், என்கவுண்டர் செய்யப்படவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பொள்ளாச்சி பாலியல் தொடர்பான செய்திகளை வெளியிடுவதில் தேசிய ஊடகங்கள் பாரபட்சம் காட்டி வருகிறது. நிர்பயா உள்பட சமீபத்தில் நடைபெற்ற பீகார் பாலியல்  விவகாரம் வரை அனைத்து செய்திகளை தமிழகத்தை சேர்ந்த ஊடகங்கள் வெளியிட்டு, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வரு நிலையில், தேசிய ஊடகங்கள் இதுகுறித்து கவனத்தில் கொள்ளாமல் இருந்து வருகின்றன.

ஏற்கனவே மதுரை உயர்நீதி மன்றம், டில்லி நிர்பயா வழக்குக்கு முக்கியத்துவம் கொடுத்த தேசிய ஊடகங்கள், பொள்ளாச்சி விவகாரத்துக்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்க மறுக்கிறது என்று கேள்வி எழுப்பியது.

இந்த நிலையில், பிரபல பாடகியான மீ-டூ புகழ் சின்மயியும், டில்லி ஊடகங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டில்,  தேசிய மீடியாக்கள் பொள்ளாச்சி விவகாரத்தை கையில் எடுக்க வேண்டும். இது பொள்ளாச்சி பாலியல் தொடர்பான புகாரின்  உண்மையை நாடறிய செய்யும் என கேட்டுக்கொண்டுள்ளார்.