கோவை:

நெஞ்சை பதற வைத்துள்ள பொள்ளாச்சி பாலியல் சம்பவம் தொடர்பான  குற்றவாளிகள் மற்றும் அவர்கள் தொடர்பான வழக்குகளில் ஆஜராக மாட்டோம் என்று கோவை வழக்கறிஞர்கள் சங்கம் அதிரடியாக அறிவித்து உள்ளது.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளிக்க முன்வர வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ள பாதிக்கப்பட்ட பெண் தரப்பு வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன, பெண்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக துணிந்து புகார் அளித்தோம் என்று தெரிவித்தார்.

இந்த விவகாரத்தை அரசியலாக்கினால் யாரும் புகார் கொடுக்க முன்வர மாட்டார்கள்  என்ற நோக்கிலேயே தற்போது இந்த விவகாரம் அரசியலாக்கப்பட்டு வருவதாக கூறியவர், இந்த வழக்கில்,  பாதிப்பு ஏற்படுத்தியவர்களுக்கு ஆதரவாகத்தான் வாதாட மாட்டோம் என வழக்கறிஞர் சங்கத்தில் முடிவு எடுத்துள்ளதாகவும்,   ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்காக வாதாடத் தயார் எனவும் வழக்கறிஞர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சியில் கடந்த சில ஆண்டுகளாக இளம்பெண்கள் மர்ம முறையில் மரணம் அடைவதும், தற்கொலை செய்யும் நிகழ்வுகளும் அதிகரித்து வந்துள்ளன. அதுபோல, பல இடங்களில், பெண் களை மிரட்டடி ஆபாச வீடியோ, பாலியல் பலாத்காரம், மிரட்டி பணம் பறித்தல் போன்ற நிகழ்வு களும் அரங்கேறி வருவதாகவும் புகார்கள் வந்தன. ஆனால், இதுகுறித்து காவல்துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்க முன்வராத நிலையில், பாதிக்கப்பட்ட  பெண் மற்றும் அவரது உறவினர்கள் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

புகாரின் அடிப்படையில் பொள்ளாச்சி ஜோதிநகர் பகுதியைச் சேர்ந்த சபரிராஜன், சதீஸ், வசந்தகு மார், ஆகிய மூவரை கைது செய்தனர். பின்னர் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு தலைமறைவாகி பின்னர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாள் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளனர்.

விசாரணையில், சுமார் 200க்கும் மேற்பட்ட பெண்களை அந்த பாலியல் கும்பல் சீரழித்து இருப்ப தாகவும், இதற்கு பின்னணியாக  ஆளுங்கட்சி பிரமுகரின் மகன் இருந்து வந்தாகவும் கூறப்படுகிறது.

பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பல பெண்கள் தைரியமாக முன்வந்து புகார் அளிக்க வேண்டும் எனவும் அவர்களின் தகவல்கள் பாதுகாப்பாக வைக்கப்படும் எனவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே பாதிப்பு ஏற்படுத்தியவர்களுக்கு ஆதரவாக யாரும் வாதாடக்கூடாது என கோவை வழக்கறிஞர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியது.

இந்த நிலையில், இந்த வழக்கை எடுத்து நடத்தி வரும் வழக்கறிஞர்,  பாதிக்கப்பட்டவர்களுக்கு உடன் இருந்து அனைத்து விதமான உதவிகளையும் செய்ய தயார் எனவும் பெண்கள் புகார்கள் அளிக்க முன் வந்தால் தான் இனி இதுபோன்று யாரும் பாதிக்கப்பட மாட்டார்கள் எனவும் வழக்கறிஞர்கள் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.