கௌதம் மேனன் இயக்கிய ‘வாரணம் ஆயிரம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சமீரா ரெட்டி தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் பல படங்களில் நடித்து வந்தார்.

பிஸியாக நடித்து கொண்டிருந்த நடிகை சமீரா ரெட்டி 2014 ஆம் ஆண்டு மகாராஷ்டிராவை சேர்ந்த அக்ஷய் வர்தே என்ற தொழிலதிபரை மணந்தார். இவர்களுக்கு அடுத்த ஆண்டே ஒரு மகன் பிறந்தார்.

இந்நிலையில் 4 வருடங்களுக்கு பிறகு மீண்டும் கர்ப்பமாகியுள்ளார் சமீரா ரெட்டி. இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படம் வெளியிட்டுள்ள சமீரா தனது புதிய வரவிற்காக காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel