’ஃபிரண்ட்ஸ்’ படத்தில் நடிகர் விஜய்க்கு தங்கையாக நடித்த விஜயலட்சுமி கன்னட சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வந்தார்.
பெங்களூரி வசித்து வரும் விஜயலட்சுமி, ரத்த அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இவரது மருத்துவச் செலவுக்கு தமிழ் மற்றும் கன்னட சினிமாத்துறையினர் நிதியுதவி வழங்கினர்.
கன்னட நடிகர் ரவி பிரகாஷ், ரூ. 1 லட்சம் பண உதவி செய்தார். இந்நிலையில் தற்போது செல்போனுக்கு ஆபாசமான குறுந்தகவல்களை அனுப்பி பாலியல் தொல்லை அளித்ததாக நடிகர் ரவி பிரகாஷ் மீது, நடிகை விஜயலட்சுமி புட்டேனஹள்ளி பகுதி காவல்நிலையத்தில் பாலியல் புகார் கொடுத்துள்ளார்.
இந்த புகார் கன்னட சினிமாவில் புயலை கிளப்பி வருகிறது. இந்த குற்றச்சாட்டு குறித்து பேசிய நடிகர் ரவி பிரகாஷ், மனிதாபிமான அடிப்படையில் விஜயலட்சுமிக்கு உதவினேன். தற்போது என் மீது பாலியல் புகார் அளித்துள்ளார். அவருக்கு உதவி செய்தது என் தவறு. விஜயலட்சுமி புகார் தொடர்பாக காவல் நிலையத்தில் விளக்கம் அளித்துவிட்டேன் என ரவி பிரகாஷ் கூறியுள்ளார்.