யோத்தி

யோத்தி மடாதிபதி ஒருவர் அப்துல் கலாம் பெயரில் மசூதி அமைக்க நிலம் வழங்க தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்து மக்கள் புனித தலமாக வணங்கும் அயோத்தியில் கடந்த 1992 ஆம் வருடம் இந்து அமைப்பினரால் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அந்த இடத்தில் ராமர் கோவில் கட்ட தொடங்கிய வழக்கில் கடந்த 2010 ஆம் ஆண்டு அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது.  சுமுகமான தீர்ப்பு காண உச்சநீதிமன்றம் மத்தியஸ்தர்கள் குழுவை அமைத்துள்ளது

இன்னும் ஒரு வாரத்தில் மத்தியஸ்தர்கள் குழு தங்கள் பணியை தொடங்க உள்ளது. இந்த குழு அதன்பிறகு நான்கு வாரங்களில் இடைக்கால அறிக்கையை வழங்க உள்ளது. தேவைப்பட்டால் இந்த மத்தியஸ்தர் குழுவின் கால கட்டத்தை நீட்டிக்கவும் வாய்ப்புள்ளது. இந்த மத்தியஸ்தர்கள் குழுக்கூட்டம் ரகசியமாக நடக்கும் எனவுமூடகங்களுக்கு அனுமதி இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் அயோத்தி நகரை சேர்ந்த மடாதிபதி மகந்த் பரமஹன்ச தாஸ், “அயோத்தி விவகாரத்தில் மத்தியஸ்தர் குழு அமைத்ததற்கு வரவேற்பு தெரிவிக்கிறேன். பாபர் ஒரு வெளிநாட்டுக்காரன். தீவிரவாதி. அவன் பெயரில் மசூதி அமைப்பது தவறான செயலாகும். நமது நாட்டவரான அப்துல் கலாம் பெயரில் மசூதி அமைக்கலாம். அப்படி அமைத்தால் அதற்காக நிலம் அளிக்க நான் தயாராக உள்ளேன்” என தெரிவித்துள்ளார்.