தனது கணவருடன் 3 மணி நேரம் பேசிக் கொண்டிருந்த பெண்ணிற்கு, மூளையில் மருத்துத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளனர். பேச்சு மண்டலம் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு பேசுக் கொண்டிருந்த போதே அறுவை சிகிச்சை மேற்கொண்ட சம்பவம் ஜெய்ப்பூரில் நடந்துள்ளது.

dcr

ராஜஸ்தான் மாநிலம் டாங் பகுதியை சேர்ந்தவர் ஷாந்தி தேவி. 30 வயது நிரம்பிய ஷாந்தி தேவிக்கு அடிக்கடி மயக்கமும், பேசுவதில் சிக்கலும் ஏற்பட்டு வந்தது. இதனை தொடர்ந்து அவர் ஜெய்ப்பூரில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சை மேற்கொள்ள வந்திருந்தார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஷாந்தி தேவிக்கு மூளையில் கட்டி இருப்பதை கண்டறிந்தனர்.

பேச்சு மண்டலத்தை கட்டுப்படுத்தும் பகுதியில் ஷாந்தி தேவிக்கு கட்டி இருப்பதால் அவரால் பேசுவதற்கு சிரமமும், மயக்கமும் ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் ஷாந்தி தேவி பேசிக் கொண்டிருக்கும் போதே அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்கள் முடிவெடுத்தனர்.

பேசும்போது அறுவை சிகிச்சை மேற்கொள்வது குறித்து ஷாந்தி தேவியிடம் மருத்துவர்கள் விளக்கினர். சிகிச்சையின் போது குரல்வளம் பாதிக்கப்பட கூடாது என்பதற்காகவே இவ்வாறு சிகிச்சை மேற்கொள்வதாகவும் மருத்துவர்கள் விளக்கம் அளித்தனர். இதற்கு ஷாந்தி தேவி ஒப்புதல் அளிக்கவே அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள ஏற்பாடுகள் நடைபெற்றன.

அதன்படி அறுவை சிகிச்சையின் போது தசைப்பகுதி மட்டும் மருத்துப் போகும்படி மருந்து செலுத்தப்பட்டது. அதனால் ஷாந்தி தேவி அறுவை சிகிச்சையின் போது செல்போனில் தனது கணவருடன் பேசிக் கொண்டிருந்தார். இந்த சிகிச்சை சுமார் 3 மணி நேரம் வரை நடைபெற்றது. அதுவரை ஷாந்தி தேவி விடாமல் தனது கணவருடன் பேசிய படி இருந்தார். இறுதியாக ஷாந்தி தேவிக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை நடந்து முடிந்தது. அவர் உடல்நலம் தேறி வருவதாக மருத்துவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

சுமார் 3 மணி நேரம் பேசிக் கொண்டிருந்த நோயாளிக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டது அனைவரிடமும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.