கொழும்பு: இலங்கையின் வடக்குப் பகுதியான மன்னாரில் ஒரு பெரும் மயானக் குழியில் கண்டெடுக்கப்பட்ட 350 எலும்புக்கூடுகள், இலங்கை இனப்போரின் காலகட்டத்தை இன்னும் பின்னுக்கு நகர்த்திச் செல்கின்றன.
இலங்கையில் பல்லாண்டுகளாக நடந்துவரும் சிங்களப் பேரினவாத கொடுமைகளையும், அதனையொட்டி எழுந்த தமிழர் – சிங்களர் உள்நாட்டுப் போரையும் நாம் அறிவோம்.
இலங்கையில், தமிழர் ஆயுதப் போராட்டம் என்பது நாம் அறிந்தவரையில் 1980ம் ஆண்டிற்கு பின்னர்தான் தீவிரமடைந்தது.
ஆனால், தற்போது மன்னார் பகுதியில் ஒரு பெரும் மயானக் குழியில் கண்டெடுக்கப்பட்டுள்ள 350 எழும்புக்கூடுகளை ஆய்வுசெய்தபோது, அந்த எலும்புக்கூடுகளின் வயது கி.பி.1499 க்கும் கி.பி.1720க்கும் இடையிலான காலகட்டம் என்று தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வறிக்கை, அமெரிக்க நாட்டின் மியாமியிலுள்ள ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்டு, மன்னார் நடுவர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அந்த எலும்புக்கூடுகள், கார்பன் டேட்டிங் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
இதன்மூலம், இலங்கையின் இனப்போர், கடந்த சில நூற்றாண்டுகளுக்கு முன்னதாகவே தொடங்கப்பட்டதாக இருக்குமோ? என்ற அதிர்ச்சி கேள்வி எழுந்துள்ளது.
– மதுரை மாயாண்டி