சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் விதமாக வழக்கம் போல் கூகுள் தனது டூடுளை பிரத்யேகமாக வெளியிட்டு சிறப்பித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8ம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
பல தடைகளை தாண்டி சாதித்த பெண்களை கொண்டாடும் வகையில் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.
சாதனை புரிந்த பெண்களை கொண்டாடும் தினம் ஒவ்வொரு நாடுகளிலும் வெவ்வேறு நாட்களில் அனுசரிக்கப்பட்டு வந்தன.
இதையடுத்து, 1975ம் ஆண்டு மார்ச் 8ம் தேதி சர்வதேச மகளிர் தினத்தை அதிகாரப்பூர்வமாக ஐநா அறிவித்ததுடன் அன்று முதல் கொண்டாடி வருகிறது.
அதனை தொடர்ந்து உலக நாடுகள் முழுவதும் மார்ச் 8ம் தேதி சர்வதேச மகளிர் தினம் அனுசரிக்கப்படுகிறது.
வழக்கமாக தலைவர்கள் பிறந்த நாள், கண்டுப்பிடிப்புகள் மற்றும் முக்கிய தினங்களை கூகுள் நிறுவனம் டூடுள் வெளியிட்டு சிறப்புது வருகிறது.
அந்த வகையில் இன்றைய டூடுள் மகளிர் தினத்தை சிறப்பித்துள்ளது.
இன்றைய கூகுள் டூடுளில் மகளிருக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் 13 சர்வதேச பெண் பிரபலங்களின் மேற்கோள்களை நினைவுக் கூறும் வகையில் வடிவமைக்கபப்ட்டுள்ளது.
இதில் குறிப்பாக இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம், வெளியுறவுத்துறை அதிகாரியாக இருந்த பார்வையற்ற பெண் பெனோ ஜெஃபைன் ஆகியோரின் சிந்தனைத் துளிகள் இடம்பெற்றுள்ளன.
சாதனை படைத்த பெண்களின் சிந்தனை துளிகள் இந்தி, பெங்காலி, அரபு உள்ளிட்ட 11 மொழிகளில் கூகுள் டூடுளில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
உலகில் உள்ள அனைத்து பெண்களுக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்…