ஜம்மு
சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்று ஜம்மு பேருந்து நிலையத்தில் வெடித்ததில் 28 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
கடந்த மாதம் 14 ஆம் தேதி புல்வாமா பகுதியில் நடந்த பாகிஸ்தானின் ஜெய்ஷ் ஈ முகமது தற்கொலைப்படை தாக்குதலில் இருந்தே மாநிலம் கடும் அச்சத்தில் ஆழ்ந்துள்ள்து. கடந்த சில நாட்களாக நடமாட்டம் குறைந்திருந்த காஷ்மீர் நகரங்களில் தற்போது சிறிது சிறிதாக மீண்டும் மக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
காஷ்மீர் மாநில தலைநகரங்களில் ஒன்றான ஜம்முவில் இன்று காலை சுமார் 11 மணிக்கு சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்று வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் சுமார் 28 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்களில் பெரும்பலானோர் பேருந்து ஓட்டுனர்களும் நடத்துனர்களும் ஆவார்கள்.
இந்த குண்டு வெடிப்பில் உயிர் சேதம் ஏற்படவில்லை என தெரிய வந்துள்ளது. காயமடைந்தோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த பகுதி முழுவதும் தற்போது காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இது குறித்து வேறு எந்த விவரமும் இதுவரை தெரிவிக்கபப்டவில்லை.