ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போடியில் பேட்டிங் மட்டுமில்லாமல் விஜய் சங்கர் பவுலிங்கிலும் அசத்தி இந்தியாவின் வெற்றிக்கு உதவினார். கடைசி ஓவரில் 11 ரன்களை லாவகமாக தடுத்து 3 பந்துக்களில் ஆட்டத்தை முடித்து இந்தியா வெற்றிப்பெற விஜய் சங்கர் உதவினார்.

vijay

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றிப்பெற்ற நிலையில் இரு அணிகளும் மோதும் 2வது ஒருநாள் போட்டி நேற்று நாக்பூரில் நடந்தது. இதில் ஆஸ்திரேலிய அணியை 8 விக்கெட் வித்யாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றுப்பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 250 ரன்கள் சேர்த்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதனை தொடர்ந்து 251 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி வீரர்கள் 49.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 8 ரன்கள் வித்யாசத்தில் தோல்வியடைந்தது.

KohliShankar1

இந்நிலையில் பேட்டிங்கில் 46 ரன்கள் எடுத்த நிலையில், பவுலிங்கில் 2 ஓவர்களுக்கு 15 ரன்கள் விட்டுக் கொடுத்து முக்கியமான தருணத்தில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி விஜய் சங்கர் அசத்தியுள்ளார். கடைசி ஓவரில் வெற்றிப்பெற ஆஸ்திரேலிய அணிக்கு 11 ரன்கள் தேவை என்ற நிலையில் பந்து வீசும் வாய்ப்பு விஜய் சங்கருக்கு வழங்கப்பட்டது.

கடைசி ஓவரின் முதல் பந்திலேயே 52 ரன்கள் சேர்த்திருந்த ஸ்டோயின்ஸை விஜய் சங்கர் அவுட்டாக்கி வெளியேற்றினார். அடுத்த 2வது பந்தில் 2 ரன்கள் விட்டுக் கொடுத்த விஜய் சங்கர் 3 வது பந்தில் மற்றுமொரு ஆஸ்திரேலிய வீரர் ஜம்பாவை போல்ட் அவுட்டாக்கினார். இதனால் 49.3 ஒவர்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் 8 ரன்கள் வித்யாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி வெற்றிப்பெற்றது.

நேற்றைய போட்டியில் பரப்பரப்பான கடைசி தருணத்தில் முக்கியமான 2 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்தியாவின் வெற்றிக்கு உதவிய விஜய் சங்கருக்கு அனைவரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.