இராமேஸ்வரம்:

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கடற்பகுதியில் மூட்டை மூட்டையாக கட்டி வைக்கப்பட்டி ருந்த உயர்ரக பீடி இலைகையை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். அந்த பீடி இலைகள் மன்னார் வளைகுடாவில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு கடத்த இருந்த தாக கூறப்படுகிறது.

மன்னார் வளைகுடா கடல் பகுதியான வேதாளை கடல்வழியாக  உயர் ரக பீடி இலைகள் இலங்கைக்கு  கடத்த இருப்பதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து, அந்த பகுதியில் அதிகாரிகள் தீவிர வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது, அந்த பகுதியில் கேட்பாரற்று நின்ற வாகனம் ஒனறில், 12 மூட்டைகளில் சுமார் 600 கிலோ எடை கொண்ட உயர்ரக பீடி இலைகளை பதுக்கி வைக்கப்பட்டிருந்தது  கண்டு பிடிக்கப்பட்டது.

அதையடுத்து, அந்த வாகனத்தையும்,  பிடி இலைகளையும் பறிமுதல் செய்த அதிகாரிகள் கடத்தலில் ஈடுப்பட்ட வேதாளை பகுதியை சேர்ந்து ரசீது மற்றும் அன்வர்தீன் ஆகிய இரு வரையும்  விசாரனைக்காக இராமநாதபுரம் சுங்கத்துறை அலுவலகத்திற்க்கு அழைத்து  சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

பீடி இல்லை எவ்வாறு கடத்தப்படுகிறது என்றும், அதை வாங்க இலங்கையில் இருந்து வந்தது யார் என்றும் பிடிபட்டவர்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

பறிமுதல் செய்யப்பட்டுள்ள பீடி இலைகள்  மதிப்பு சுமார் 6 லட்சம் இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.