1990களில் தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்தவர் நக்மா. இவர் தமிழில் மட்டுமல்ல பிற மொழிகளிலும் முன்னணி ஹீரோயினியாக வலம் வந்தார்.

இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, போஜ்புரி, மராத்தி, பெங்காலி உட்பட பல மொழிகளில் நடித்துள்ளார். ஒரு காலகட்டத்தில் நடிகை நக்மா தீவிரமான அரசியல்வாதியாக மாறினார்.

தற்போது நக்மா மீண்டும் சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார். பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனுக்கு அம்மாவாக ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.இந்தப் படத்தை த்ரி விக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கவுள்ளார்.
[youtube-feed feed=1]