யு.ஆர். ஜமீல் இயக்கத்தில், நடிகை ஹன்சிகா நடிக்கும் ’மஹா’ படத்தின் போஸ்டர்கள் வெளியிடப்பட்டன. அதில் ஒரு போஸ்டரில், காசி நகரின் பின்னணியில் காவி உடையில் காணப்படும் ஹன்சிகா, புகைப்பிடிப்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது.

இந்து மத உணர்வுகளையும், பெண் துறவிகளையும் கொச்சைப்படுத்தும் விதத்தில் இருப்பதாக கூறி சென்னை மாநகர காவல் ஆணையரிடம், இந்து மக்கள் முன்னணி அமைப்பாளர் வி.ஜி. நாராயணன் புகார் அளித்திருந்தார்.
வி.ஜி. நாராயணன் அளித்த புகாரின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 2 வார காலத்திற்குள் விளக்கம் அளிக்கக்கோரி சென்னை மாநகர காவல் ஆணையருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது .
Patrikai.com official YouTube Channel