தலைநகர் டெல்லியில் 7 மக்களவை தொகுதிகள் உள்ளன.பிரதான கட்சிகள்- காங்கி =ரஸ், பா.ஜ.க., ஆம் ஆத்மி. இவை தனித்து போட்டியிட்டால் -7 இடங்களையும் பா.ஜ.க.’ அலேக்காக’ அள்ளிச் சென்று விடும் என்கிறது- கருத்து கணிப்பு.
‘’தனித்தே நிற்பேன். யாருடனும் உடன்பாடு இல்லை’’என்று அடம் பிடித்த ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால்- இப்போது இறங்கி வந்துள்ளார்.
ஆம்.காங்கிரஸ் கூட்டணிக்கு அவர் தலை அசைத்து விட்டார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் ஓ.கே.சொல்லி விட்டார்.
இரண்டு கட்சிகளுக்கும் இடையே புது விதமான வரைவு ஒப்பந்தம் தயாரானது. இரு கட்சிகளும் ஆளுக்கு 3 இடத்தில் போட்டியிடுவது- ஒரு தொகுதியில் பொது வேட்பாளரை நிறுத்துவது என்பது –அதன் ஷரத்து.
பொது வேட்பாளராக பா.ஜ.க.வின் அதிருப்தி தலைவர்களான யஷ்வந்த் சின்ஹா அல்லது சத்ருகன் சின்ஹாவை நிறுத்துவது என்பது –திட்டம்.
வெண்ணை திரண்டு நெய்யாக வேண்டிய தருணத்தில் தாழியை தரையில் போட்டு உடைத்து விட்டது- டெல்லி காங்கிரஸ்.
டெல்லி மாநில காங்கிரஸ் தலைவர் ஷீலா தீக்ஷித் வீட்டில் ,அவரது தலைமையில் நேற்று உள்ளூர் காங்கிரஸ் பிரமுகர்கள் ஒன்று கூடி பேசினார்கள்.’ ’ஆம் ஆத்மியுடன் ஒரு போதும் சேரக்கூடாது’’என கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் ஒருமித்த குரலில் சொல்ல –அவர்கள் எதிர்ப்பு ராகுல் காந்திக்கு உடனடியாக அனுப்பப்பட்டது.
ரொம்பவே யோசித்தார் அவர். எனினும் இந்த விவகாரத்தில் மூக்கை நுழைக்க ராகுல் விரும்ப வில்லை.’’கூட்டணி குறித்து டெல்லி காங்கிரஸ் எடுக்கும் முடிவே இறுதியானது‘’ என்று கூறிவிட்ட ராகுல்-
‘’டெல்லியில் பா.ஜ.க.வை தோற்கடிப்பது முக்கியம். அதற்கான வியூகங்களை வகுக்க வேண்டும்’’என்றும் சொல்லி வைக்க-
அதன் அர்த்தம் தெரியாமல் ஷீலா தீக்ஷசித்- ஆழ்ந்த யோசனையில் இருக்கிறார்.
-பாப்பாங்குளம் பாரதி