சென்னை:
தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு வரும் 15ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. ஏப்ரல் 5ம் தேதி வரை விண்ணப்பிக்க லாம் என்றும் கூறி உள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு ஆசிரியர்கள் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
8000க்கும் அதிகமான மெட்ரிகுலேசன் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தமிழகம் முழுவதும் கற்பிக்கும் பணியை விருப்புவர்களுக்கு இந்த ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வுஅறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான விண்ணப்பம் வரும் 15ம் தேதி வழங்கப்படுகிறது.
மேலும், விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஏப்ரல் 5
எழுத்துத்தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும். என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில், ஒன்றாம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை எடுக்கும் ஆசிரியர்கள் குழந்தைகளின் இலவச கல்வி மற்றும் கட்டாய கல்விக்கான சட்டவிதியின் படி கண்டிப்பாக தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.
கடந்த 2013 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளில் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டது. ஆனால், கடந்தாண்டு நீதிமன்ற வழக்கு காரணமாக இந்த தேர்வு நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.