பெய்ஜிங்:
மார்க்ஸோடு இணைந்திருங்கள், பேய், ஆவியை நம்பாதீர்கள் என கட்சி உறுப்பினர்களை ஆளும் சீன அரசு எச்சரித்துள்ளது.
சீனாவில் கிறிஸ்துவ மதம், புத்த மதம், இஸ்லாம் மீது நம்பிக்கையுள்ளவர்களுக்கு சுதந்திரம் தரப்பட்டுள்ளது.
ஆனால் கட்சி உறுப்பினர் நாத்திகவாதிகளாகவே இருக்கவேண்டும். மூட நம்பிக்கை வழக்களை பின்பற்ற கட்சியினருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால், கடந்த சில வருடங்களாக கட்சியின் மூத்த உறுப்பினர்கள் பலர் மூட நம்பிக்கைக்கு ஆட்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கட்சி மற்றும் கட்சித் தலைமையை எவ்வாறு வலுப்படுத்துவது என்பது குறித்த விரிவான அறிக்கை, சீன ஆளும் கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிக்கையில் வெளியாகியுள்ளது.
அதில், சீனா முழுவதும் மார்க்சியம் வழிகாட்டியாக உள்ளது. ஆனால், மார்க்ஸியத்தையும் லெனினையும் நம்பாமல், பேய் மற்றும் ஆவியை நம்புகிறார்கள். உண்மையை நம்பாமல் பணத்தை மட்டும் நம்புகிறார்கள்.
மார்க்சியத்தோடு இணைந்திருங்கள். பேய் மற்றும் ஆவியை நம்பாதீர்கள் என்று கட்சி உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.