டில்லி:

ருப்புக்கோட்டை பேராசிரியை  நிர்மலா தேவி விவகாரம் தொடர்பான வழக்கில்,  அவர் ஜாமின் கோரி தாக்கல் செய்ய மனுமீதான விசரணைக்கு அவரை காவல்துறையினர் அழைத்து வரவில்லை.

அவருக்கு உடல்நலம் சரியல்ல என்று காவல்துறை சார்பில் விளக்கம் அளித்த நிலையில், அவர் காவல்துறையினரின் டார்ச்சர் காரணமாக, தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக அவரது வழக்கறிஞர் பரபரப்பு தகவலை தெரிவித்து உள்ளார்.

கல்லூரி மாணவிகளை பண ஆசை கூறி பாலியல் தொழிலுக்கு அழைப்பு விடுத்த விவகாரத்தில், அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி  கைது செய்யப்பட்டு கடந்த ஓராண்டுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த விவகாரத்தில் கவர்னர் மாளிகை முதல், மதுரை காமராஜ் பல்கலைக்கழக அதிகாரிகள் வரை ஏராளமானோர் சம்பந்தப்பட்டு இருப்பதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், தனக்கு ஜாமின் வழங்க வழக்க வேண்டும் என்று உயர்நீதி மன்றம் மதுரை கிளையில் நிர்மலாதேவி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுமீது நேற்று விசாரணை நடைபெற்றது.

விசாரணையின்போது, நிர்மலாதேவி ஜாமின் கொடுக்க மறுப்பது ஏன் என்று கேள்வி எழுப்பிய நீதிமன்றம், ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்ற விசாரணைக்கு தடை விதித்தது. மேலும், இந்த விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணை திருப்தி அளிக்கவில்லை என்ற நீதிபதி, நிர்மலா தேவிக்கு ஜாமீன் வழங்காதது ஏன்? சந்தானம் விசாரணைக்குழு அமைத்தது யார் விசாரணையின் நோக்கம் என்ன? ஆடியோவில் உள்ள உயர் அதிகாரிகள் யார் யார்  என்று சரமாரியாக கேள்வி எழுப்பி வழக்கு விசாரணையை நாளை (இன்றைக்கு)  தள்ளி வைத்தது.

இந்த நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. விசாரணைக்கு நிர்மலாதேவி ஆஜராகாத நிலையில், அவருக்கு உடல்நிலை சரியில்லை என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது பரபரப்பை ஏற்படுத்தியது.

நேற்று விசாரணைக்கு அவர் நல்ல நிலையில் வந்து சென்ற நிலையில், அவருக்கு என்ன ஆனது என்று கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பேசிய நிர்மலாதேவி வழக்கறிஞர், வழக்கு தொடர்பாக அவர் உண்மை பேசிக்விடக்கூடாது என்பதற்காக அவரை காவல்துறையினர் உதைத்துள்ளனர் என்றும், அதன் காரணமாக அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான நிர்மலா தேவி  தற்கொலைக்கு முயன்றுள்ளார் என்றும் அவரது வழக்கறிஞர்  பசும்பொன் பாண்டியன் கூறினார்.

இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.