கோவை:

ன்னியாகுமரி வரும் மோடிக்கு நிச்சயம் கருப்புக்கொடி காட்டுவோம் என்று மதிமுக பொதுச்செயலாளர்  வைகோ திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார்.

மார்ச் 1ந்தேதி பிரதமர் மோடி கன்னியாகுமாரி வருகை தருகிறார். அப்போது அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரி மைதானத்தில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்.

இந்த நிலையில், கன்னியாகுமரி வரும் பிரதமர் மோடிக்கு நிச்சயம் கருப்புக் கொடி காட்டப்படும் என்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த வைகோ கூறி உள்ளார்.

ஸ்டெர்லைட்டுக்கு எதிராக முக்கிய ஆதாரங்களை வெளியிட்ட சமூக ஆர்வலர் முகிலன்,  சென்னையில் நண்பர் ஒருவரை சந்தித்துவிட்டு… சொந்த ஊருக்கு ரயிலில் புறப்பட்ட அவர் இன்று வரை காணவில்லை. அவர் எங்கியிருக்கிறார் என்றும் தெரியவில்லை.  தற்போது 12 நாட்கள் கடந்தும் முகிலன் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை. அவர் காணாமல் போனதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொறுப்பு என்று தெரிவித்தார்.

மேலும்,  முல்லை பெரியாறு விவகாரம், நீட் தேர்வு, காவிரி டெல்டா மண்டலத்தை விவசாயத்தை அழிக்க முயற்சி என்று மத்திய அரசு தொடர்ந்து தமிழகத்துக்கு துரோகம் செய்து வருகிறது. சமூக நீதியை குழி தோண்டி புதைக்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு இறங்கி இருக்கிறது.
கஜா புயல் விவகாரத்திலும் தமிழகத்துக்கு மோடி அரசு துரோகம் இழைத்திருக்கிறது. எனவே, தொடர்ந்து தமிழகத்துக்கு தொடர்ந்து துரோகம் இழைத்து வரும் பிரதமர் மோடி… கன்னியாகுமரி வரும் போது கருப்புக் கொடி காட்டுவோம். அறவழியில் இந்த போராட்டம் நடைபெறும் என்று அவர் கூறினார்.

இதற்கிடையில் கன்னியாகுமரி வரும் பிரதமர் மோடிக்கு  கருப்புக்கொடி காட்ட வேண்டாம் என வைகோவிற்கு மீண்டும் மீண்டும் கோரிக்கை விடுத்து கொள்கிறேன் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறி உள்ளார்.