சென்னை:
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடத்தி முடிக்கக ரூ.414 கோடி தேவைப்படும் என்றும், அதற்கான நிதி ஒதுக்கக்கோரியும், தமிழகஅரசுக்கு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு கோரிக்கை வைத்துள்ளார்.
நாடு முழுவதும் இன்னும் ஓரிரு மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழகத்தில் தேர்தல் நடத்துவதாக தொடர்பாக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் காவல் உயர் அதிகாரிகள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த செயலாளர்களுடன் கடந்த இ ருநாட்களாக ஆலோசனை நடத்தி வந்தார். இந்த ஆலோசனை கூட்டத்தில், தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவும் கலந்து கொண்டார்.
அப்போது தேர்தல் செலவுகளுக்கு 414 கோடி ரூபாய் வரை நிதி ஒதுக்குமாறு தமிழக அரசின் நிதித்துறை செயலருக்கு கோரிக்கை விடுத்ததாகவும், தேர்தல் சமயத்தில் பாதுகாப்புக்காக குறைந்தபட்சம் 200 கம்பெனி துணை ராணுவப்படை வரவழைப்பதென்றும் முடிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் சத்யபிரதா சாஹூ தெரிவித்து உள்ளார்.