டில்லி

பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி தடை செய்யப்பட்டதன் விளைவாக தக்காளி விலை கடுமையாக சர்ந்துள்ளது.

கடந்த வாரம் வரை தக்காளிக்கு நல்ல கிராக்கி இருந்து வந்தது. மொத்த விலை சந்தையில் தக்காளி கிலோவுக்கு ரூ.10 – 12 என்னும் விலையில் விற்கப்பட்டது. சில்லறை விலையில் ஒரு கிலோ தக்காளி ரூ.40 க்கு விற்கப்பட்டது. இதை ஒட்டி தக்காளி பயிர்ட்ட விவசாயிகள் மகிழ்ச்சியாக இருந்தனர். அத்துடன் பாகிஸ்தான் நாட்டுக்கு தக்காளி இந்தியாவில் இருந்து பெருமளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது.

புல்வாமாவில் பாகிஸ்தான் பயங்கரவாத இயக்கமான ஜெய்ஷ் ஈ முகமது நடத்திய தாக்குதலுக்கு பிறகு இந்தியா பாகிஸ்தானுக்கு வர்த்தக சலுகைகளை நிறுத்திக் கொண்டது. பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி நிறுத்தப்பட்டதால் அங்கு தக்காளி உள்ளிட்டவைகளுக்கு கடும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. அங்கு ஒரு கிலோ தக்காளி ரூ.200க்கு விற்கப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தற்போது இந்தியாவில் தக்காளி விலை மொத்த சந்தையில் ஒரு கிலோ ரூ.2 என விற்கப்படுகிறது. சில்லறை விலையில் ஒரு கிலோ ரூ.20க்கு விற்கப்படுகிறது. இதற்கு முக்கிய காரணமாக தக்காளி உற்பத்தி அதிகரித்ததும் பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி தடை செய்யப்பட்டதும் என கூறப்படுகிறது.

தற்போதுள்ள நிலையில் உற்பத்தி செய்யப்பட்ட அத்தனை தக்காளியும் உள் நாட்டில் மட்டுமே விற்பனை செய்ய முடியும் என்பதால் இந்த பிரச்னை ஏற்பட்டுள்தாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.