புதுடெல்லி:

கல்விக்காக மட்டும் ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக பட்ஜெட் தாக்கல் செய்த டெல்லி துணை முதல்வர் மணீஷ் ஷிஷோடியா தெரிவித்துள்ளார்.


டெல்லி ஆம் ஆத்மி அரசின் 2019-20ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை துணை முதல்வர் மணீஷ் சிஷோடியா தாக்கல் செய்தார்.

அப்போது அவர் பேசும்போது, கல்வி மற்றும் 2 பல்கலைக்கழகங்களுக்காக ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது மொத்த பட்ஜெட்டில் 26 சதவீதமாகும்.

டிஜிட்டல் முறை கல்வியை டேப்லட் மூலம் மாணவர்களுக்கு போதிக்கப்படும். இதற்காக ரூ.9 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 10-ம் வகுப்பில் 80 சதவீதத்துக்கு அதிகமாக மதிப்பெண் பெறுவோருக்கு டேப்லட் வழங்கப்படும். 2019-20ம் ஆண்டுக்கு ரூ.60 ஆயிரம் கோடிக்கு பட்ஜெட் போடப்பட்டுள்ளது என்றார்.