வுகாத்தி

அருணாசலப் பிரதேச வன்முறையில் காயமடைந்தவர்களை ராகுல் காந்தி நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.

அருணாசலப் பிரதேசத்தில் வசித்து வந்த அம்மாநிலத்தை சேராத 6 இனத்தை சேர்ந்தவர்களுக்கு குடியுரிமை வழங்க உள்ளதாக அரசுஅறிவித்தது. அதனால் நடந்த முழு அடைப்பில் கடந்த 22 ஆம் தேதி வன்முறை வெடித்தது. அருணாசலப் பிரதேச மாநிலம் இதாநகரில் வெடித்த வன்முறையால் ஏராளமானோர் காயம் அடைந்துள்ளனர். இது மாநிலம் எங்கும் பரவி எங்கும் வன்முறை நிலவியது.

இந்த வன்முறை சம்பவங்களில் காயமடைந்தோர் கவுகாத்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தற்போது ஒரு பேரணியில் கலந்துக் கொள்ள கவுகாத்தி வந்துள்ளார். கவுகாத்தியில் வன்முறையில் காயம் அடைந்தவர்களை நேரில் சென்று ராகுல் காந்தி நேரில் சென்று சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

மருத்துவமனை மருத்துவர்கள் அளித்து வரும் சிகிச்சை குறித்து ராகுல் காந்தி கேட்டறிந்தார். அத்துடன் நோயாளிகளுடன் இருந்தவர்ர்களுடன் பேசி நோயாளிகள் உடல் நிலை குறித்து விசாரித்தார். அவர்களிடம் ராகுல் காந்தி மருத்துவர்கள் நோயாளிகளை நன்கு கவனித்து வருவதாக ஆறுதல் தெரிவித்துள்ளார்.