மதுரை:

தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் உடனுக்குடனான செய்திகளால் பெண்கனின் சீரியல் மோகம் குறைந்து உள்ளதாக மதுரை உயர்நீதி மன்ற நீதிபதி கிருபாகரன் தெரிவித்து உள்ளார்.

நாடு முழுவதும் கடந்த ஜனவரி 29-ம் தேதி முதல், கேபிள் டிவி, டி.டி.ஹெச். சேனல்கள் பார்ப்பதற்கான கட்டணங்களை டிராய்  அதிரடியாக உயர்த்தியது.  இதை எதித்த்து சென்னை மெட்ரோ கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சென்னை உயர்நீதி மன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் அமர்வு விசாரித்தது. வழக்கின் இன்றைய விசாரணையின்போது, தனியார் செய்தி தொலைக்காட்சிகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ள நீதிபதிகள், தொலைக்காட்சியின்  அண்மை செய்திகளை உடனுக்குடன் தருவதால் பெண்கள் சீரியல்களை தவிர்த்து, செய்தி சேனல்களை பார்க்க ஆரம்பித்துள்ளனர்.

பொதுமக்களின் மனம் மாசுபடாமல் இருக்க செய்தி தொலைக்காட்சிகள் துணையாக இருக்கின்றன என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதைத்தொடர்ந்து கட்டண உயர்வு குறித்து,  டிராய், மத்திய ஒளிபரப்புத்துறை செயலாளர் ஆகியோர் வரும் மார்ச் 19ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். பின்னர் வழக்கை ஒத்திவைத்தனர்.