டில்லி
மத்திய அமைச்சர் மேனாகா காந்தி தனது மகன் வருண் காந்தியை தனது பிலிபித் தொகுதியில் நிற்க வைத்து தாம் தொகுதி மாறி போட்டியிட உள்ளார்
மறைந்த காங்கிரஸ் தலைவர் சஞ்சய் காந்தியின் மனைவி மேனகா காந்தி தற்போது பாஜகவில் உள்ளார். மேனகா காந்தி பாஜக அமைச்சரவையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் முன்னேற்றத்துறை அமைச்சர் பதவியில் உள்ளார். மேனகா காந்தி தனது பிலிபித் தொகுதியில் தேர்தலில் போட்டியிட்டு 7 முறை வெற்றி பெற்றுள்ளார். இவர் மகன் வருண் காந்தி உத்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள சுல்தான்பூர் தொகுதியின் மக்களவை உறுப்பினர் ஆவார்.
சென்ற முறை நடந்த தேர்தலில் வருண் காந்தி வெற்றி பெற்ற சுல்தான்பூர் தொகுதியில் தற்போது சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணிக்கு வெற்றி வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் மேனகா காந்தியின் பிலிபித் தொகுதியில் பாஜகவுக்கு நல்ல வெற்றி வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. எனவே மேனகா காந்தி தனது பிலிபித் தொகுதியை தனது மகன் வெற்றி பெற விட்டுக் கொடுக்க தீர்மானித்துள்ளார்.
மேனகா காந்தி அரியானா மாநிலத்தில் உள்ள கர்னால் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். பாஜக தலைமை அவருக்கு கர்னால் தொகுதியை அளிக்க சம்மதித்தால் பிலிபித் தொகுதி வருண் காந்திக்கு வழங்கப்படும் என தெரிகிறது. வருண் காந்தி ஏற்கனவே கடந்த 2009 ஆம் வருட மக்களவை தேர்தலில் பாஜக சார்பில் நின்று வெற்றி பெற்றுள்ளதால் அவருக்கு அதிக வாய்ப்புள்ளது.
மேனகா காந்தி போட்டியிட விரும்பும் கர்னால் தொகுதியில் தற்போதைய மக்களவை உறுப்பினர் அஸ்வினி மின்னா காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியை சமீபத்தில் மிகவும் புகழ்ந்து பேசி உள்ளார். அதனால் பாஜக தலைமை அதிருப்தி அடைந்துள்ளதால் அந்த தொகுதி மேனகா காந்திக்கு அளிக்கபட வாய்ப்ப்புள்ளது.
மேனகா காந்தியும் பிரியங்கா காந்தியும் உறவினர்கள் என்பது பிரியங்காவின் சித்தி மேன்கா காந்தி என்பதும் குறிப்பிடத்தக்கது.