ஸ்ரீநகர்
இன்று அதிகாலை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லைப் பகுதியில் இயங்கி வந்த பயங்கரவாதிகள் முகாமை இந்திய விமானப்படை குண்டு வீசி அழித்துள்து.
கடந்த 14 ஆம் தேதி அன்று பாகிஸ்தானின் ஜெய்ஷ் ஈ முகமது பயங்கரவாத இயக்கம் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40 சி ஆர் பி எஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர் உல உலக நாடுகள் இந்த தாக்குதலுக்காக பாகிஸ்தானுக்கு கடும் கண்டனம் தெரிவித்தன. பாகிஸ்தான் அரசு தங்களுக்கு ஜெய்ஷ் ஈ முகமது இயக்கத்துடன் எவ்வித தொடர்பும் இல்லை என மறுத்தது.
இன்று அதிகாலை இந்திய விமான அடைகள் எல்லைக் கட்டுப்பாட்டுபகுதியில் அமைந்துள்ள பயங்கரவாதிகள் முகாம் மீது திடீர் தாக்குதல் நடத்தியது. புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி அளிக்கும் வகையில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் மிராஜ் 2000 வகை போர் விமானங்கள் பயன்படுத்தப் பட்டுள்ளன.
இன்று அதிகாலை 3.30 மணிக்கு நடந்த இந்த தாக்குதலில் 12 போர் விமானங்கள் பயன்படுத்தப் பட்டுள்ளன. சுமார் 11000 கிலோ வெடிகுண்டுகளைக் கொண்டு நடந்த தாக்குதலில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பத்யில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம் முழுமையாக அழிக்கப்ப்பட்டுள்ளன.