போபால்

க்களவை தேர்தலுக்கான சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளின் கூட்டணி மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களிலும் தொடர்கிறது

மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தலைமையில் பாஜகவை எதிர்த்து மெகா கூட்டணி அமைக்க பல மாநில கட்சிகள் திட்டமிட்டன. ஆனால் திடீரென இந்த திட்டத்தில் இருந்து சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் பின் வாங்கி விட்டன. அதன் பிறகு கடந்த ஜனவரி மாதம் 11 ஆம் தேதி இந்த இரு கட்சிகளும் உத்திரப் பிரதேச மாநிலத்துக்கான கூட்டணி அமைப்பதாக முடிவு செய்யப்பட்டது.

அந்த கூட்டனி அறிவிப்பில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் அமேதி தொகுதியிலும்  மற்றும் முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் ரேபரேலி தொகுதியிலும் இந்த கூட்டணி போட்டியிடாது என தெரிவிக்கப்பட்டது.

தற்போது இந்த கூட்டணி மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலத்திலும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியான அறிவிப்பில் மத்திய பிரதேசத்தில் உள்ள 29 தொகுதிகளில் 3 தொகுதிகளில் சமாஜ்வாதி கட்சியும் மீதம் உள்ள 26 தொகுதிகளிலும் பகுஜன் சமாஜ் கட்சி போட்டியிட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அத்துடன் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள 5 தொகுதிகளில் பகுஜன் சமாஜ் கட்சி 4 தொகுதிக்ளிலும் சமாஜ்வாதி கட்சி 1 தொகுதியிலும் போட்டியிட உள்ளது.