ஜம்மு:
ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடத்துவது மோடிக்கு வைக்கும் பரீட்சை என்று முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா கூறியுள்ளார்.

மக்களவையோடு சேர்த்து ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருகிறது.
இது குறித்து ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஓமர் அப்துல்லா தனது ட்விட்டர் பக்கத்தில், 1995-96 முதல் ஜம்மு காஷ்மீரில் சரியான நேரத்துக்கு தேர்தல் நடத்தப்பட்டுள்ளது.
இதேபோல் திட்டமிட்டபடி மோடி தேர்தல் வைப்பாரா? அல்லது ஜம்மு காஷ்மீரை தவறாக கையாளுவதை ஏற்றுக் கொள்வாரா?சில நாட்களுக்குள் எங்களுக்கு பதில் தாருங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
Patrikai.com official YouTube Channel