பூஞ்ச்
காஷ்மீர் எல்லைப்பகுதியான பூஞ்ச் மறும் ராவல் கோட் இடையில் மீண்டும் பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது
கடந்த 14 ஆம் தேதி புல்வாமா மாவட்டத்தில் நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் மரணம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் நாட்டின் ஜெய்ஷ் ஈ முகமது இயக்கம் பொறுப்பு ஏற்றுக் கொண்டது.
இந்த தாக்குதலால் காஷ்மீர் மாநிலம் கடும் பதட்டத்தில் மூழ்கியது. எல்லைப் புற அச்சுறுத்தல் காரணமாக அந்தப் பகுதியில் பேருந்து சேவை கடந்த திங்கட்கிழமை நிறுத்தப்பட்டது. பூஞ்ச் மற்றும் ராவல்கோட் இடையிலான இந்த சேவை காஷ்மீரையும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரையும் இணைப்பதாகும்
இந்நிலையில் ஒரு வாரத்துக்கு பிறகு மீண்டும் இந்த பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.
இது குறித்து பூஞ்ச் போக்குவரத்து அதிகாரி ஜகாங்கீர் கான், “கடந்த திங்கட்கிழமை ரத்து செய்யப்பட்ட இந்த சேவை இன்று மீண்டும் தொடங்கி உள்ளது. பாகிஸ்தான் ஆகிரமிப்பு காஷ்மிருக்கு 8 பேர் திரும்பி வந்துள்ளனர். இங்கிருந்து இருவர் சென்றுள்ளனர்” என தெரிவித்துள்ளார்