திரைத்துறையின் உயரிய விருதான ஆஸ்கர் விருது இன்று வழங்கப்பட்டது. பல்வேறு பிரிவின் கீழ் வழங்கப்பட்ட ஆஸ்கர் விருதின் சிறந்த குறும்படமாக இந்தியாவின் ‘ப்ரீயட்.எண்ட் ஆஃப் சென்டென்ஸ்’ என்ற ஆவணப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
திரைத்துறையின் உயரிய விருதாக கருதப்படும் 91வது ஆஸ்கர் திரைப்பட விருது வழங்கும் விழா இன்று அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா நகரில் நடைபெற்றது. இதில் சிறந்த நடிகர், நடிகை, துணை நடிகை, சிறந்த ஆவணப்படம், ஆடை வடிவமைப்பாளர், இசை, அனிமேஷன், பாடல், சிறந்த இயக்குநர் என பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டன.
* சிறந்த படத்திற்கான ஆஸ்கர் விருதை ’கிரீன் புக்’ என்ற திரைப்படம் தட்டிச் சென்றது. இதனை பீட்டர் ஃபரேலி இயக்கியுள்ளார்.
* சிறந்த ஆவணப்படத்திற்கான விருதை ‘ஃப்ரீ சோலோ’(FREE SOLO) வென்றது.
* சிறந்த குறும்படத்திற்கான விருதை ‘ப்ரீயட்.என்ட் ஆஃப் சென்டென்ஸ்’( PERIOD.END OF SENTENCE ) என்ற இந்திய ஆவணப்படம் வென்றது. மாதவிடாய் பிரச்சனையை பற்றி கூறும் இந்த திரைப்படம் இந்தியாவின் உருவாகப்பட்டது.
* சிறந்த அனிமேஷன் படத்திற்கான விருதினை ‘ஸ்பைடர் மேன்: இன்டு தி ஸ்பைடர் வெர்ஸ்’(SPIDER-MAN:INTO THE SPIDER VERSE) என்ற அனிமேஷம் படம் வென்றது.
* சிறந்த அனிமேஷன் குறும்படத்திற்கான ஆஸ்கர் விருது BAO படத்துக்கு வழங்கப்பட்டது!
* சிறப்பான காட்சி படுத்துதலுக்கான விருது ‘ஃபர்ஸ் மேன்’ படத்திற்கு அளிக்கப்பட்டது. இதற்கான விருதை பவுல் லாம்பர்ட், இயான் ஹண்டர் உள்ளிட்ட 4 பேர் பெற்றுக் கொண்டனர்.
* சிறந்த இசைக்கான விருதை ’போஹிமேன் ராப்சோடி’(BOHEMIAN RHAPSODY) என்ற படம் வென்றது.
* சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருது ‘ஏ ஸ்டார் ஸ் பார்ன்’ என்ற படத்தின் ‘ ஷேல்லோ’ பாடலுக்காக வழங்கப்பட்டது.
* சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது BOHEMIAN RHAPSODY படத்தில் நடித்த ராமி மாலிக் என்பவருக்கு வழங்கப்பட்டது.
* சிறந்த நடிகைக்கான விருதை தி ஃபேவரைட் படத்தில் நடித்த ஆலிவியா கால்மன் தட்டிச் சென்றார்.
* சிறந்த இயக்குநருக்கான விருது ரோமா படத்தை இயக்கிய அல்போன்சோ குவாரனுக்கு அளிக்கப்பட்டது.
* சிறந்த துணை நடிகைக்கான விருது ரெஜினா சிங்குக்கு வழங்கப்பட்டுள்ளது. If Beale street could talk என்ற படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்கான ரெஜினா இந்த விருதை வென்றார்.
* சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருது GREEN BOOK படத்தில் நடித்த மஹேர்சலா அலிக்கு வழங்கப்பட்டது
* சிறந்த ஒப்பனைக்கான விருது VICE படத்தில் பணியாற்றிய கிரேக் கேனோம், கேட் பிஸ்கோ, பாட்ரிசியா தெஹானே ஆகியோருக்கு வழங்கப்பட்டது
* சிறந்த ஆடை வடிவமைப்புக்கான ஆஸ்கர் விருது BLACK PANTHER படத்துக்காக ரூத் கார்டர், தயாரிப்பு வடிவமைப்பாளர் ஹன்னா பீச்லர், செட் அமைப்பாளார் ஜே ஹார்ட் ஆகியோருக்கு வழங்கப்பட்டது
* சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது ROMA படத்தின் அல்போன்சோ குவாரனுக்கு வழங்கப்பட்டது; சிறந்த வெளிநாட்டு திரைப்பட பிரிவிலும் ROMA படம் ஆஸ்கர் விருதை வென்றுள்ளது
* வசூலில் சாதனை படைத்த BLACK PANTHER படம் 3 ஆஸ்கர் விருதுகளை வென்றது. சிறந்த பின்னணி இசை, ஆடை வடிவமைப்பு, தயாரிப்பு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ப்ளாக் பந்தர் திரைப்படம் விருதுகளை அள்ளியது.
* அதேபோன்று ப்ரையான் சிங்கர் இயக்கிய BOHEMIAN RHAPSODY திரைப்படம் 4 ஆஸ்கர் விருதுகள் வென்றுள்ளது.