கேன்பெரா:

உலக அளவில் சிறந்த ஆசிரியர்களாக தேர்வு செய்யப்பட்ட 10 பேரில், இலங்கை தமிழ் பெண் யசோதை செல்வகுமாரனும் இடம்பெற்றுள்ளார்.


ஆஸ்திரேலியாவின் வர்கீஸ் பவுன்டேஷன் உலக அளவிலான சிறப்பாக கற்பிப்போரை ஆண்டுதோறும் தேர்வு செய்து, அவர்களுக்கு 1 மில்லியன் டாலர் பரிசு வழங்குகிறது.

இந்த ஆண்டுக்கான தேர்வுக்காக 179 நாடுகளிலிருந்து 10 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 10 பேர் தேர்வு செய்யப்பட்டனர். 10 பேரில் ஒருவராக யசோதை செல்வக்குமார் இடம் பெற்றுள்ளார்.

இலங்கையில் நடந்த கலவரத்தின்போது அங்கிருந்து வெளியேறி இவரது குடும்பம் ஆஸ்திரேலியாவில் குடியேறியது.

மலைவாழ் மக்கள் கல்வி கற்க இவர் ஆற்றிய பணிக்காக இந்த முதன்மை விருது வழங்கப்பட்டிருக்கிறது. இந்த உலகை பற்றிய அறிவையும், அவர்கள் குரலை ஒலிக்கச் செய்வதிலும் யசோதை பெரும் பங்காற்றியிருக்கிறார்.

உலகின் சிறந்த ஆசிரியராக தேர்வு செய்யப்பட்ட யசோதைக்கு ஆஸ்திரேலிய நடிகர் ஹக் ஜேக்மேன் 1 மில்லியன் டாலர் பரிசுத் தொகையை வழங்கினார்.

 

[youtube-feed feed=1]