பெங்களூரில் நடைபெற்ற ஏரோ இந்தியா விமான கண்காட்சியில் ஏற்பட்ட தீ விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கார்கள் எரிந்து சேதமாகின.

car

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள எலங்கா பகுதியில் ஏரோ இந்தியா 2019 விமான கண்காட்சி நடத்தப்பட்டது. கடந்த 20ம் தேதி தொடங்கிய இந்த கண்காட்சி 24ம் தேதி வரை நடக்கிறது. விதவிதமாக கண்காட்சியி வைக்கப்பட்டுள்ள விமானங்களை பார்க்க தினமும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் காண்காட்சி நடக்கும் இடத்திற்கு அருகே திறந்த வெளியில் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்த இடங்களில் திடீரென தீப்பற்றியது. தீ மளமளவென அடுத்தடுத்த வாகனங்களுக்கு பரவியதால் நூற்றுக்கும் மேற்பட்ட கார்கள் தீயில் எரிந்து சேதமாகின.

car

தீ பற்றியது குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர் விரைந்து செயல்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். முதற்கட்ட விசாரணையில் தீ விபத்தினால் யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை என்றும், சுமார் 500 கார்கள் மற்றும் இருச்சகர வாகனங்கள் எரிந்து சேதமடைந்ததாக கூறப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]