ஸ்ரீநகர்

காஷ்மீர் மாநிலத்தில் 65000 சி ஆர் பி எஃப் மற்றும் 100 கம்பெனி துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 14 ஆம் தேதி காஷ்மீர் மாநிலம் புல்வானாவில்  நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 44 சி ஆர் பி எஃப் வீரர்கள் கொல்லப்பட்டதில் இருந்தே மாநிலத்தில் பதட்டம் நிலவி வருகிறது. ஜம்முவில் புல்வாமா தாக்குத்ல் சம்பவம் நடந்ததும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.    அந்த உத்தரவு சமீபத்தில் விலக்கப்பட்டது.

நேற்று காஷ்மீர் மாநில மத்திய, வடக்கு மற்றும் தென் பகுதி மாவட்டங்களில் அதிரடி சோதனை செய்த காவல்துறையினர் பல இயக்கத் தலைவர்களை கைது செய்துள்ளனர். காவல்துறையினர் ஜமாத் இ இஸ்லாமி அமைப்பின் தலைவர் அப்துல் ஹமித் பயாஸ், ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி அமைப்பின் தலைவர் யாசின் மாலிக் உள்ளிட்ட 12-க்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளனர். இதனால் மாநிலத்தில் பதட்டம் அதிகமாகி உள்ளது.

இந்த கைது நடவடிக்கக்கு அம்மாநில முன்னாள்முதல்வர் மெகபூபா முஃப்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மெக்பூபா தனது டிவிட்டரில், “.கடந்த 24 மணிநேரத்தில் ஹுரியத் தலைவர்கள் மற்றும் ஜமாத் அமைப்பின் தொண்டர்கள் போலீஸாரால் காரணமின்றிக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போலீஸாரின் இந்த தன்னிச்சையான செயலைப் புரிந்துகொள்ள முடியவில்லை. இந்த நடவடிக்கை ஜம்மு காஷ்மீரில் மேலும் பதற்றத்தை அதிகரிக்கும். எந்தச் சட்டத்தின் கீழ் இவர்கள் கைது செய்யப்பட்டார்கள். நீங்கள் ஒரு மனிதரைக் கைது செய்யலாம், ஆனால், அவரின் சிந்தனைகளை சிறை வைக்க முடியாதுழ்” என பதிந்துள்ளார்.

இந்த கைதுகளைத் தொடர்ந்து மத்திய அரசு 100 கம்பெனி துணை ராணுவப்படையினரை காஷ்மீர் மநிலத்துக்கு அனுப்பி வைத்துள்ளது. அத்துடன் ஏற்கனவே 65000 சி ஆர் பி எஃப் வீரர்களும் மாநிலத்தில் உள்ளனர். இவ்வாறு வீரர்கள் காஷ்மீர் மாநிலத்தில் குவிக்கப்பட்டதால் மக்கள் கடும் பீதி அடைந்துள்ளனர்.