போபால்

த்தியப் பிரதேச காங்கிரஸ் அரசு கிராமப்புற இளைஞர்களுக்கு வருடத்துக்கு 100 நாட்கள் வேலை அளிக்கும் யுவ ஸ்வாபிமான் யோஜனா என்னும் திட்டத்தை தொடங்கி உள்ளது.

மத்தியப்பிரதேசத்தில் ஆட்சி அமைத்துள்ள காங்கிரஸ் அரசு தொடர்ந்து மக்கள் பணிகளை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் அறிவித்ததை போல் ஆட்சிக்கு வந்ததும் முதல் பணியாக விவசாயிகளின் கடன்களை ரத்து செய்தது. மற்றும் விவசாயிகளுக்கான பல நலத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன.

நேற்று மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத் யுவ ஸ்வாபிமான் யோஜனா என்னும் திட்ட்த்தை தொடங்கி உள்ளார். இந்த திட்டம் கிராமப்புற இளைஞர்களின் மேம்பாட்டை அடிப்படியாகக் கொண்டு தொடங்கப்பட்டுள்ளது.

இது குறித்து கமல்நாத், “மாநிலத்தின் முன்னேற்றமான எதிர்காலத்துக்கான சாலைகள் அமைக்கும் பணியை தற்போது செய்து வருகிறோம். இதன் மூலம் விவசாய உற்பத்தி அதிகரிப்பு மற்றும் கிராமப்புற இளைஞரகளுக்கு வேலவாய்ப்பு ஆகிய பலன்கள் கிடைக்கும்.

தற்போதுள்ள நிலையில் இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாததால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த திட்டத்தின் மூலம் இளைஞர்களுக்கு மாதம் ரூ.4000 உதவித் தொகையுடன் 100 நாட்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது.

அத்துடன் இந்த நாட்களில் இளைஞர்களின் திறனை அதிகரிக்கும் பல பயிற்சிகளும் அளிக்கப்பட உள்ளன. இதன் மூலம் அவர்களால் தனித்து இயங்க முடியும். இளைஞர்களுக்கு இந்த மூன்று மாதங்களில் ரூ13500 க்கு குறையாமல் ஊதியம் கிடைக்கும்.” என தெர்வித்துள்ளார்.