புல்வாமா தாக்குதலை கண்டித்து அமெரிக்காவில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் முன்பு ஒன்றுத் திரண்ட இந்தியர்கள் ஆர்பாட்டம் நடத்தினர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ம் தேதி பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு நடத்திய தற்கொலைத் தாக்குதலில், துணை ராணுவப் படையைச் சேர்ந்த 40 வீரர்கள் உயிரிழந்தனர்.
இந்த கொடூர தாக்குதலுக்கு இந்தியா மட்டுமின்றி, உலக நாடுகளும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளிக்கும் பாகிஸ்தானிற்கு பதிலடி கொடுக்க வேண்டுமன பல தரபிப்பினரும் குரலெழுப்பி வருகின்றனர். ஒரு சிலர் பாகிஸ்தானிற்கு எதிராக கடையடைப்பு, போராட்டம் உள்ளிட்டவற்றை நடத்தி வருகின்றன.

அந்த வகையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் முன்பு அங்கு வாழும் இந்தியர்கள் ஆர்ப்பட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற இந்தியர்கள் புல்வாமாக தாக்குதலை கண்டித்தும், பாகிஸ்தானிற்கு எதிராகவும் தங்கள் முழக்கங்களை எழுப்பினர்.
[youtube-feed feed=1]