ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் போட்டியில் இருந்து ஹர்திக் பாண்டியா நீக்கப்பட்டு ரவீர்ந்திர ஜடேஜா சேர்க்கப்பட்டுள்ளார்.

hartik

ஆஸ்திரேலியா அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில் 2 போட்டிகள் கொண்ட டி20, மற்றும் ஐந்து ஒருநாள் போட்டிகளில் இரு அணிகளும் விளையாட உள்ளன. இதனை தொடர்ந்து டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களின் பெயர் வெளியிடப்பட்டது. அதில் ஆல்ரண்டரான ஹர்திக் பாண்டியாவும் இடம்பெற்றிருந்தார்.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிகளில் இருந்து ஹர்திக் பாண்டியா திடீரென நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆசியக் கோப்பை தொடரின் போது முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக வலி ஏற்பட்டுள்ளாதால் இந்த போட்டியில் இருந்து ஹர்திக் பாண்டியா விலகியுள்ளார்.