2019ம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகளின் அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது. முதல் 17 போட்டிகளை மார்ச் 23ம் தேதி முதல் ஏப்ரல் 5ம் தேதி வரை நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் கிரிக்கெட் திருவிழா என்று அழைக்கப்படும் ஐபிஎல் போட்டிகள் ஆண்டுதோறும் நடைப்பெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவணை அறிவிப்பு நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தாமதம் ஏற்பட்டது.
இந்த ஆண்டு நடைபெறும் 12வது ஐபிஎல் தொடரின் முதல் 17 போட்டிகளுக்கான தேதிகளை தற்போது பிசிசிஐ அறிவித்துள்ளது. அதன்படி மார்ச் 23ம் தேதி தொடங்கி ஏப்ரல் 5ம் தேதி வரை போட்டிகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டிகளில் பங்கேற்கும் 8 அணிகள் தங்கள் சொந்த மைதானத்தில் விளையாட உள்ளான. அனைத்து அணிகளும் குறைந்தது 4 போட்டிகளில் விளையாடுகின்றன. பெங்களூரு அணி மட்டும் 5 போட்டிகளில் பங்கேற்கிறது.
எல்லா அணிகளும் குறைந்தது 2 போட்டிகள் சொந்த மைதானத்திலும் 2 போட்டிகள் வேறு மைதானத்திலும் விளையாடுகிறது. டெல்லி அணி மட்டும் 3 போட்டிகளை சொந்த மைதானத்தில் விளையாடுகிறது. பெங்களூரு அணி 3 போட்டிகள் வேறு மைதானத்தில் விளையாடுகிறது. இதன் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெங்களூரு ராயல் சேலஞ்சரஸ் அணியை எதிர்த்து விளையாட உள்ளது.
நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு முதல் 17 போட்டிகளை நடத்த பிசிசிஐ முடிவெடுத்துள்ளது. மற்ற போட்டிகளில் அட்டவணை பிறகு வெளியிடப்படும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.