ண்டிகர்

பில்சர்மா ஷோ என்னும் தொலைக்காட்சி நிகழ்வில் இருந்து காங்கிரஸ் அமைச்சர் நவஜோத் சிங் சித்து நீக்கப்பட்டது சரியான முடிவில்லை என கபில் சர்மா கூறி உள்ளார்.

பிரபல நகைச்சுவை நடிகரான கபில் சர்மா ஒரு தனியார் தொலைக்காட்சியில் கபில் சர்மா ஷோ என்னும் நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வருகிறார். இதில் அவருடன் பஞ்சாப் மாநில காங்கிரஸ் அமைச்சர் நவஜோத் சிங் சித்து கலந்துக் கொள்கிறார். புல்வாமா தாக்குதல் குறித்து சித்து வெளியிட்ட கருத்தினால் இந்த நிகழ்ச்சியின் பார்வையாளர்கள் அவர் மீது கோபம் அடைந்தனர். அதனால் அவர் இந்த நிகழ்வில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக நடிகை அர்ச்சனா பூரன் சிங் சேர்க்கப்பட்டுள்ளார்.

இது குறித்து சித்து தனது டிவிட்டரில், ”நான் சட்டப்பேரவை கூட்டங்களில் கலந்துக் கொள்ள உள்ளதால் எனக்கு பதிலாக கபில் சர்மா ஷோ நிகழ்வில் மற்றொருவரை இரு வாரங்களுக்கு ஒப்பந்தம் செய்தனர். என்னை அந்த நிகழ்வில் இருந்து நீக்கியதாக அந்த சேனல் என்னிடம் தெரிவிக்கவில்லை. எனது கருத்துக்காக என்னை நீக்கி இருந்தால் நான் அதற்காக எனது கருத்தை என்றும் மாற்றிக் கொள்ள மாட்டேன்” என தெரிவித்தார்.

இந்நிலையில் கபில் சர்மா சண்டிகர் பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு நிகழ்வில் கலந்துக் கொண்டார். அப்போது சித்துவின் நீக்கம் குறித்து அவரிடம் வினா எழுப்பப்பட்டது.

அதற்கு கபில் சர்மா, ”தற்போது ஏற்கவே ஒப்புக் கொண்ட பல வேலைகளால் நவஜோத் சிங் சித்துவால் எனது நிகழ்வில் கலந்துக் கொள்ள முடியவில்லை. அதனால் இந்த நிகழ்வில் அர்ச்சனா பூரன் சிங் என்னுடன் கலந்துக் கொள்கிறார்.

அவரை நிகழ்ச்சியில் இருந்து அனுப்பி உள்ளது சரியான முடிவாக எனக்கு தோன்றவில்லை. இவை எல்லாம் விளம்பரத்துக்காக செய்யப்படுவதாக தோன்றுகிறது. நாம் இது குறித்து ஒரு நிரந்தர முடிவு எடுக்க வேண்டும்.

நான் பயங்கரவாத தாக்குதலை எதிர்ப்பதில் அரசுக்கு ஆதரவாக உள்ளேன்.    புல்வாமாவில் நடந்துள்ள கோழைத்தனமான தாக்குதலால் ஏராளமான வீரர்கள் கொல்லபட்டுள்ளனர்.

அதை செய்தவர்கள் அனைவரையும் கண்டுபிடித்து அழிக்க வேண்டும். இந்த நாட்டு மக்கள் அனைவருமே இந்த விவகாரத்தில் அரசுக்கு ஆதரவாகவே உள்ளனர்” என குறிப்பிட்டுள்ளார்.