தலச்சேரி, கேரளா
கேரள மாநிலம் மனந்தாவடி தேவாலயத்தை சேர்ந்த ராபின் வடக்கும்சேரி என்னும் பாதிரியாருகு 16 வயது பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் 20 வருட ஜெயில் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.
ராபின் வடக்கன்சேரி என்பவர் கேரளாவில் உள்ள மனந்தாவடி தேவாலயத்தை சேர்ந்த பாதிரியார் ஆவார். அவர் தேவாலயத்தை சேர்ந்த பள்ளியில் பணி புரிந்து வந்தார். கடந்த 2016 ஆம் வருடம் பாதிரியார் தனது மாணவியான 16 வயது சிறுமியை மிரட்டி பலமுறை பலாத்காரம் செய்துள்ளார். இதன் விளைவாக அந்த சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளார்.
சிறுமிக்கு கண்ணனூர் அருகே உள்ள தொக்கிலியங்காடி என்னும் இடத்தில் அமைந்துள்ள கிறிஸ்து ராஜ் மருத்தன்வமனையில் குழந்தை பிறந்துள்ளது. இந்த மருத்துவமனை கன்னியாஸ்திரிகள் நடத்தும் மருத்துவமனையாகும். இது குறித்து புகார் எழுந்ததும் ராபின் அதை மறுத்துள்ளார்.
ராபின் பணியாற்றும் தேவாலயத்தை சேர்ந்த சில கன்னியாஸ்திரிகள் மற்றும் பாதிரியார்கள் சேர்ந்து அந்த சிறுமியின் தகப்பனாரை மிரட்டி உள்ளனர். மிரட்டலுக்கு பயந்த சிறுமியின் தந்தை தானே மகளை பலாத்காரம் செய்ததாக நீதிமன்றத்தில் சாட்சி சொல்லி உள்ளார்.
ஆனால் வழக்கறிஞர்களின் பல கேள்விகளுக்கு திணறிய அவர் பாதிரியாரும் தேவாலய அதிகாரிகளும் மிரட்டியதால் அவ்வாறு பொய் சொன்னதை கதறியபடி நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டுள்ளார். அத்துடன் பாதிரியார் ராபின் தனது மகளை பலாத்காரம் செய்துள்ளார் என்பதையும் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கில் தேவாலயத்தை சேர்ந்த 5 கன்னியாஸ்திரிகள் அதன் பின் சேர்க்கப்பட்டனர்.
அதற்குப் பிறகு அந்த சிறுமியும் அவர் தாயாரும் வேறு சில தேவாலய அதிகாரிகளால் மிரட்டப் பட்டுள்ளனர். அந்த மிரட்டலுக்கு பயந்து அவர்கள் இந்த குற்றம் நடைபெறும் போது அந்த சிறுமிக்கு 18 வயதுக்கு மேல் ஆகிவிட்ட்டதாக பொய் சொல்லி உள்ளனர். ஆனால் அந்த பெண் பிறந்த மருத்துவமனையில் அளித்த பிறப்பு சான்றிதழின் படி அவருக்கு அப்போது 16 வயது நடந்துக் கொண்டிருந்தது நிரூபிக்கப்பட்டது.
தலச்சேரி நீதிமன்றம் நேற்று வழங்கிய தீர்ப்பில் பாதிரியார் ராபின் மற்றும் 5 கன்னியாஸ்திரிகளுக்கும் தண்டனை வழங்கபட்டுள்ளது பாதிரியார் ராபினுக்கு அனைத்து குற்றங்களுக்கும் சேர்த்து 60 வருட சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அவர் தனது தண்டனைகளை ஒரே கால கட்டத்தில் அனுபவிக்க வேண்டும் என்பதால் அவர் 20 ஆண்டுகள் சிறையில் இருக்க நேரிட்டுள்ளது.