வயநாடு:
நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்தவரின் சகோதரர் என்பதில் பெருமை கொள்கிறேன் என்று, புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த கேரள சிஆர்பிஎப் வீரர் வசந்தகுமாரின் சகோதரர் உருக்கமாக தெரிவித்து உள்ளார்.
நாட்டையே கண்ணீரில் ஆழ்த்தியுள்ள பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்இமுகமது என்ற பயங்கர வாத அமைப்பின் கொடூர தாக்குதலில் 44 சிஆர்பிஎப் வீரர்கள் உடல் சிதறி பலியானார்கள். காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் வீரர்கள் சென்றுகொண்டிருந்த பஸ் மீது தற்கொலை படையை சேர்ந்த பயங்கரவாதி வெடிகுண்டுகள் நிரப்பிய காருடன் வந்து மோடி, வெடிக்கச் செய்து பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளனர். இந்த கோர வெடிகுண்டு தாக்குதலில், பலர் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில், இந்த கொடூர தாக்குதலில் கேரள மாநிலம் வயநாடு பகுதியை சேர்ந்த வசந்த குமார் என்பவரும் ஒருவர். இதுகுறித்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவரது குடும்பத்தினர் அழுது புலம்பி வருகின்றனர். அந்த பகுதியே சோகமயமாக காட்சியளிக்கிறது.
வசந்தகுமார் மறைவு குறித்து கருத்து தெரிவித்த அவரது சகோதர் சஜீவன், உயிரிழந்த வசந்தகுமார், 82வது பட்டாலியன் பிரிவை சிஆர்பிஎப் வீரர் என்றும், 18 வருடங் களாக பணியாற்றி வருவதாகவும், இன்னும் 2 ஆண்டுகளில் அவர் ஓய்வு பெற இருப்பதாகவும் தெரிவித்தார். அவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இவர் சமீபத்தில்தான் ஊருக்கு வந்து விட்டு கடந்த 9ந்தேதி தான் பணிக்கு திரும்பியதாகவும், நேற்று நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்து விட்டதாக தகவல் வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

வசந்தகுமார் நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்துள்ளார் என்ற சஞ்சீவன், அவரது சகோதரர் என்று கூறிக்கொள்வதில் நான் பெருமைப்படுகிறேன் என்றும் உருக்கமாக கூறினார்.
[youtube-feed feed=1]