டில்லி

டி ஊழியர்களுக்கு வசதியாக மாருதி கார் சர்வீஸ் 6 நகரங்களில் 24 மணி நேரமும்  செயல்பட உள்ளது.

இந்தியாவில் பொதுவாக கார் சர்வீஸ் பணி நிலையங்கள் காலை சுமார் 9 மணி முதல் அதிகபட்சமாக மாலை 6 மணி வரை மட்டுமே நடைபெறுகிறது.    தற்போது நாடெங்கும் ஐடி ஊழியர்கள் அதிகரித்து வருகின்றனர்.   அவர்களுக்கு பெரும்பாலும் இரவு நேர பணியில் பணி புரிய நேரிடுகிறது.    இதனால் அவர்களால் இந்த நேரத்தில் தங்கள் கார்களை சர்வீஸ் செய்ய முடிவதில்லை.

அவர்களுக்கு வசதியாக மாருதி கார் நிறுவனம் தனது சர்விஸ் பணி நிலையங்களை 24 மணி நேரமும் திறந்து வைக்க திட்டமிட்டது.    இந்த திட்டம் ஏற்கனவே குருகிராமில் கடந்த வருடம் சோதனை முறையில் நடத்தப்பட்டது.   அது வெற்றி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

அதை ஒட்டி மாருதி நிறுவனம் குருகிராம் தவிர நொய்டா, பெங்களூரு, புவனேஸ்வர், மங்களூரு மற்றும் சஹிபாபாத் நகரங்களில் 24 மணி நேர சர்வீஸ் நிலையங்களை திறந்துள்ளது.    இந்த நிலையங்கள் ஐடி நிறுவனங்கள் அதிகம் உள்ள பகுதிகளில் திறக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இதனால் பகல் நேரத்தில் கார் சர்வீஸ் செய்துக் கொள்பவர்களின் நெரிசல் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.    இரவு நேரங்களில் கார்களை சர்வீசுக்கு விடுபவர்களுக்கு வசதியாக அவர்கள் அலுவலகத்துக்கு  இலவசமாக நிறுவனத்தில் கொண்டு விடப்படுகிறது.